அதானியை மோடி அணைப்பார் .. மக்கள் பசுவை அணைக்க வேண்டும் இதுவல்லவோ அரசு : சு.வெங்கடேசன் எம்.பி கிண்டல்
பிப்ரவரி 14ம் தேதி என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
பசு தினம்
இந்நிலையில், பிப்ரவரி 14ம் தேதியை பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுமாறு அண்மையில் மத்திய அரசின் அமைப்பான விலங்குகள் நல வாரியம் அறிக்கை வெளியிட்டது.

இதுவல்லவோ அரசு
மத்திய அரசின் இந்த அறிவிப்பிறகு பாஜக கட்சியினர் வரவேற்பை தெரிவித்த நிலையில் பல கட்சியினரும் அரசியல் விமர்சகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர், அந்த வகையில் தமிழக எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில்
இந்தியாவில்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 8, 2023
“மகிழ்ச்சி பொங்க”
இரண்டு வழிமுறைகளை
ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதானியை மோடி அணைப்பார்.
மக்கள் பசுவை
அணைக்க வேண்டும்.
இதுவல்லவோ அரசு. pic.twitter.com/NurgDFHUqj
இந்தியாவில் “மகிழ்ச்சி பொங்க” இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதானியை மோடி அணைப்பார்.
மக்கள் பசுவை
அணைக்க வேண்டும்.
இதுவல்லவோ அரசு என்று கிண்டல் செய்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது