இலங்கையில் காற்றாலை துறையில் முதலீடு செய்கிறதா அதானி குழுமம்?
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதானி குழுமம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை மேம்பாடு செய்வதற்கும், இயக்குவதற்கும் அதானி குழுமம் இலங்கையுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் இலங்கை சென்றிருந்த அதானி குழும தலைவர் கௌதம் அதானி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்த விபரங்கள் வெளியாகாத நிலையில், காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதானி குழுமம முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் முக்கிய அதிகாரிகள் மன்னாரின் வடகிழக்கு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.