மிகப்பெரிய துறைமுகத்தை வாங்கிய அதானி - என்ன காரணம்!

Israel Gautam Adani
By Sumathi Feb 01, 2023 07:24 AM GMT
Report

இஸ்ரேலின் 2வது பெரிய துறைமுகமான ஹைஃபா துறைமுகம் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 அதானி

அதானி போர்ட்ஸ் (APSE.NS) மற்றும் உள்நாட்டு இரசாயனங்கள் மற்றும் தளவாட நிறுவனமான கடோட் ஆகியவை இணைந்து 4 பில்லியன் ஷெக்கல்கள் (1.15 பில்லியன் அமெரிக்க டாலருக்கு) ஹைஃபா துறைமுகத்தை வாங்கியுள்ளது.

மிகப்பெரிய துறைமுகத்தை வாங்கிய அதானி - என்ன காரணம்! | Adani Group Took Over Israel Haifa Port

இந்திய ரூபாய் மதிப்பில் 9,658 கோடி. இஸ்ரேலில் தொடர்ந்து அதானி முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. துறைமுகத்தை வாங்கியதை அடுத்த நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், அதானி "முழு துறைமுக நிலப்பரப்பையும் மொத்தமாக மாற்றுவோம்.

ஹைஃபா துறைமுகம் 

அதானி-கடோட் நிறுவன கூட்டணியை மட்டும் பெருமை சேர்க்காமல், ஒட்டுமொத்த இஸ்ரேலையும் பெருமைப்படுத்தும் வகையில் சரியான முதலீடுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.

ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாள் 'மிக முக்கியமான நாள்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் அதானி சந்தித்துப் பேசினார்.