தொடர் சரிவில் அதானி குழுமம் : வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட ரிசர்வ் வங்கி

Gautam Adani
By Irumporai Feb 02, 2023 06:56 AM GMT
Report

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் விவரங்களை தெரிவிக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

சரிந்த பங்குகள்

அதானி குழுமம் பல ஆண்டுகளாக பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்குகளை கையாளுதல் போன்றவற்றில் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன, பங்கு கடும் வீழ்ச்சியினை சந்தித்தன் காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி.

தொடர் சரிவில் அதானி குழுமம் : வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட ரிசர்வ் வங்கி | Adani Group Loss Reserve Bank Order To Banks

அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் சுமார் ரூ. 8 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி உத்தரவு

இதனையடுத்து, இப்போதுள்ள சூழலில் பங்கு விற்பனையை தொடர்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. என்னை பொறுத்தவரை முதலீட்டாளர்களின் நலனுக்குக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். இழப்புகளில் இருந்து அவர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளோம் என கவுதம் அம்பானி தெரிவித்துள்ளார்.

கவுதம் அம்பானி பங்கு விற்பனை ரத்து செய்யும் முடிவை எடுத்ததையடுத்து, அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.