இனி மின்கட்டணத்தை அதானி குழுமமே வசூலிக்கும் - முதல்வர் அறிவிப்பு

Telangana Gautam Adani
By Karthikraja Jun 29, 2024 12:16 PM GMT
Report

 மின்கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் வழங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. 

ஹைதராபாத்

ஹைதராபாத்திலுள்ள ஓல்ட் சிட்டி பகுதியின் மின் விநியோக உரிமை மற்றும் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திற்கு வழங்குவதாக, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். 

revanth reddy adani

முன்னோடி திட்டமாக ஓல்ட் சிட்டி பகுதியின் பொறுப்பு அதானி குழுமத்திடம் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பிறகு ஹைதரபாத் நகர மின் விநியோகப் பொறுப்பை வழங்கவுள்ளதாகவும், அதன் பின்மாநிலம் முழுவதற்குமான பொறுப்பை வழங்க இருப்பதாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். 

21 கோடி கரெண்ட் பில் - ஷாக் ஆன வீட்டு உரிமையாளர்

21 கோடி கரெண்ட் பில் - ஷாக் ஆன வீட்டு உரிமையாளர்

அதானி குழுமம்

மின் நுகர்வோர் கட்டணம் செலுத்தாமல் இருப்பதும், அதனை வசூலிக்கச் செல்லும் மின்வாரிய ஊழியர்கள் அந்தப் பகுதி மக்களால் தாக்கப்படுவதுமே தனியாரிடம் பொறுப்பை வழங்குவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இனி மின்கட்டணத்தை அதானி குழுமமே வசூலிக்கும் - முதல்வர் அறிவிப்பு | Adani Group Collect Electricity Bill In Hyderabad

இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் அதானி குழுமத்திற்கு 25 சதவீதமும், மாநில அரசுக்கு 75 சதவீதமும் வழங்கப்படும் என்றும், இதற்கான பேச்சுவார்த்தை இரு தரப்பினரிடையே நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாரத் ராஷ்டிர சமிதி

இந்த முடிவு குறித்து பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செய்தித் தொடர்பாளர் மன்னே கிரிஷாங்க் கூறுகையில், "கிருஹ ஜோதி' திட்டத்தின் கீழ் காங்கிரஸ் உண்மையிலேயே இலவச மின்சாரம் கொடுக்கிறது என்றால், ஹைதராபாத்தில் வீட்டு மின் கட்டணத்தை வசூலிக்கத் தனியார் நிறுவனத்தை ஏன் ஈடுபடுத்துகிறது? காங்கிரஸ் கட்சி ஓல்ட் சிட்டி பகுதியினரிடம் வைத்திருக்கும் மரியாதை இதுதானா? 

அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுத் துறைகளை ஒப்படைப்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? இதில், 25 சதவீத வருவாய் அதானிக்குப் போக இருக்கின்றது. இது தெளிவான பகல் கொள்ளை. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.