அதானி குழும நிறுவன முறைகேடு... - விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழு... - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு...!
அதானி குழும நிறுவன முறைகேடு குறித்து 6 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாபெரும் சரிவை சந்தித்த அதானி
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமம் பல முறைகேடுகளை செய்திருப்பதாகவும், அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாகவும் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன. இவ்விவகாரம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பின்னுக்குத் தள்ளப்பட்ட அதானி
இதனையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு கடந்த வாரம் ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து, உலக பணக்காரர் பட்டியலில் அதானி 30 இடத்திற்கு மேல் தள்ளப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இக்குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் இடம்பெறுவார்கள். பொதுமக்களுக்கு பணம் குறித்த அச்சுறுத்தல் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதனால், சிறப்பு நிபுணர் குழு, 2 மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.