ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான பவுலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி - ஷாக்கான ரசிகர்கள்...!
ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான பவுலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதியானது.
இதனையடுத்து, போட்டிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு, கொரோனா தொற்றுடன் ஒரு வீரர் களம் இறங்க அனுமதி இருக்கிறது. ஆனால், யாருடன் சேராமல் தனியாக பயணிக்க வேண்டும்.
ஆனால் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.