தளபதி விஜய் பற்றிய இரு ரகசியங்களை வெளியிட்ட விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர்
விஜய் பற்றிய இரண்டு முக்கிய ரகசியங்களை வெளியிட்டு முன்னாள் விஜய் மக்கள் இயக்க தலைவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் விஜய்க்கும் தனக்கும் மட்டும் தெரிந்த ரகசியங்கள் தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ரவிராஜா வெளியிட்டுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே எஸ்.ஏ. சந்திர சேகரனின் சீதா, நண்பர்கள் இன்னிசைமழை உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்த ரவிராஜாவை, நாளையதீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய்க்கு ரசிகர் மன்றம் வைத்து செயலாளராக்கியவர் எஸ்.ஏ. சந்திர சேகரன்.
தொடர்ந்து விஜய் மன்றம் மக்கள் இயக்கத்தின் 28 ஆண்டுகளாக இயக்க பொறுப்புகளில் இருந்தவர் ரவிராஜா. கவுரவ தலைவராக இருந்த புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்து, அகில் இந்திய விஜய் மக்கள் இயக்கத்துக்கு பொறுப்பாளரான பின்னர் அவருக்கு எதிராக ரவிராஜா செயல்பட்டு வந்துள்ளார்.
அதற்கு முன்பாக தங்களுக்கும், எனக்கும் மட்டும் தெரிந்த 2 விசயங்களையும், உங்களுக்கு தெரியாத 2 விஷயங்களையும், ஆதாரமான சில புகைப்படங்களையும் , தங்களிடம் காண்பிக்க வேண்டும், அது விசயமாக பேச வேண்டும், நேரில் சந்தித்து பேச 5 நிமிடம் வாய்ப்பு தாருங்கள் என்று ரவிராஜா , நடிகர் விஜய்க்கு அனுப்பி உள்ள கடிதத்தில் பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.
ரவிராஜா குறிப்பிட்டுள்ளபடி இருவருக்கு மட்டும் தெரிந்த அந்த ரகசியம் என்ன? அது தொடர்பான புகைபட ஆதாரங்கள் வைத்திருக்கிறார் என்றால் அது என்னவாக இருக்கும் ? என்ற எதிர்பர்ப்பு திரை உலகினர் மத்தியின் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கின்றது.