நடிகர் அஜித்தை இரவு நேரங்களில் விடாமல் தொந்தரவு செய்யும் நடிகைகள்..!
நடிகர் அஜித்திடம் வாய்ப்பு கேட்டு நடிகர் மற்றும் நடிகைகள் போன் செய்து தொந்தரவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைத்துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட மொபைல் போன்களையும்,சிம் கார்டுகளையும் பயன்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும்,அதிக ரசிகர்களையும் தக்க வைத்த நடிகருமான அஜித் அடிக்கடி தனது மொபைல் எண்ணை மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையில் தனது அசாத்திய திறமையால் ஏராளமான ரசிகர்களின் மனத்தில் கொள்ளை கொண்டு தன் பக்கம் வைத்திருக்கும் அஜித் திரைக்கு பின்னால் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றால் அவரின் மொபைல் எண்ணை வாங்கி கொள்ளும் பிரபலங்கள் அவரை இரவு,பகல் பார்க்காமல் கால் செய்து தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு சிம் கார்டு என்று பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.