‘நீங்க விர்ஜினா..’ யாஷிகாவிடம் கேட்ட ரசிகர் - அதுக்கு யாஷிகா என்ன சொன்னாருன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு யாஷிகாவிற்கு பல படவாய்ப்புகள் குவிந்தன. தற்போது ‘கடமையை செய்’, ‘இவன் தான் உத்தமன்‘, ‘ராஜ் பீமா’, ‘பாம்பாட்டம்‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுதான் குணமடைந்தார்.
இந்நிலையில், எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா, அவ்வப்போது தன் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். நேரம் கிடைக்கும்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய யாஷிகாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, யாஷிகாவை பார்த்து ரசிகர் ஒருவர் நீங்க விர்ஜினா என்று கேட்டுள்ளார்.
அதற்கு யாஷிகா சிரித்தபடி ‘நான் யாஷிகா’ என பதிலளித்தார். மிகவும் சர்ச்சையான கேள்விக்கு யாஷிகா சிரித்தவாறு பதிலளித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. முன்னாள் காதலரான நிரூப் பற்றியும் யாஷிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாங்கள் இப்போது நல்ல நண்பர்களாகவே இருகின்றோம் என்று பதிலளித்தார்.