ராட்சத மலைப்பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த யாஷிகா - வைரலாகும் வீடியோ
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜாம்பி’ போன்ற படங்களில் நடித்தவர்தான் யாஷிகா. விஜய் டிவியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா, சுமார் 4 மாதமாக படுத்த படுக்கையாக இருந்தார்.
சமீபத்தில் குணமாகி மீண்டும் ஆக்டிவாகி இருக்கிறார். இந்நிலையில், யாஷிகா பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்.
அதில் மலைப்பாம்பு ஒன்றை அலேக்காக தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு நடிகை யாஷிகா கூலாக போஸ் கொடுத்திருக்கிறார்.
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.