‘என் கல்யாணத்திற்கு அப்பா, அம்மா சம்மதிச்சுட்டாங்க.. எனக்கு விரைவில் திருமணம்..’ - யாஷிகா

viral-photo திருமணம் வைரல் actress-yashika marriage-message யாஷிகா பதிவு
By Nandhini Apr 01, 2022 12:02 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு யாஷிகாவிற்கு பல படவாய்ப்புகள் குவிந்தன. தற்போது ‘கடமையை செய்’, ‘இவன் தான் உத்தமன்‘, ‘ராஜ் பீமா’, ‘பாம்பாட்டம்‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், கடந்த ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா, அவ்வப்போது தன் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் எனக்கு திருமணம் என்று பதிவிட்டுள்ளார். என் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள், இது arranged திருமணம் தான், லவ்லாம் செட் ஆகாது என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் நான் ரசிகர்களை entertain செய்வேன் என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், உண்மையாக யாஷிகாவிற்கு திருமணமா? இல்லை இன்று ஏப்ரல் 1ம் தேதி என்பதால் இவர் இப்படியொரு போஸ்ட் போட்டுள்ளாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

‘என் கல்யாணத்திற்கு அப்பா, அம்மா சம்மதிச்சுட்டாங்க.. எனக்கு விரைவில் திருமணம்..’ - யாஷிகா | Actress Yashika Marriage Message Viral Photo