குழந்தையை போல் நடக்க கற்றுக்கொள்ளும் யாஷிகா - காண்போரை கண் கலங்க செய்யும் வீடியோ
நடிகை யாஷிகா ஆனந்த் 3 மாதங்களுக்கு பிறகு படுக்கையில் இருந்து எழுந்து நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த இருட்டு அறையில் முரட்டு குத்து, பாடம், மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2,ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இதனிடையே சென்னை இசிஆர் சாலையில் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இரவு 11 மணியளவில் மகாபலிபுரம் அருகே வந்த போது யாஷிகா ஓட்டி வந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பாவனி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்தனர். யாஷிகாவின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு இடுப்பில் எலும்பு முறிவு என பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்ட யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்துக்கு கால், இடுப்பு, வயிறு என பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் எழுந்து வாக்கர் உதவியுடன் நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் வலுவான விருப்பம் !! எந்த ஆதரவும் இல்லாமல் மீண்டும் என் காலில் வலுப்பெற்று மீண்டும் நடப்பேன் என்று நம்புகிறேன் . என்னை நன்றாக கவனித்துக் கொண்ட டாக்டர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.