2 மாதத்திற்கு பிறகு எழுந்து நின்ற யாஷிகா - ரசிகர்கள் கண்ணீர்

twitter cured Yashika Aannand Ashok
By Anupriyamkumaresan Sep 27, 2021 01:59 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

சமீபத்தில் நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து குறித்த விபத்தில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதன்பின்னர், யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட யாஷிகாவிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

2 மாதத்திற்கு பிறகு எழுந்து நின்ற யாஷிகா - ரசிகர்கள் கண்ணீர் | Actress Yashika Anand Cured And Discharged

இந்நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் உடல் நிலையை பற்றி தகவலை தெரிவித்து வந்த யாஷிகா சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு எழுந்து நின்றுள்ளார்.

இவரை நடிகர் அசோக் தனது மனைவியுடன் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "எனக்கும், எனது குடும்பத்திற்கும் நல்ல தோழியாக இருக்கும் யாஷிகா குணமடைந்துவருகிறார்.

அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மீண்டுவர என் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படமும் தற்போது வைரலாக பரவ தொடங்கி இருக்கிறது.