அப்போ 17 வயசுதான்; ஒரு 10 பேர்.. தியேட்டரில் நடந்த விஷயம் - நடிகை யாஷிகா குமுறல்!
யாஷிகா ஆனந்த்
துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, பெஸ்டி, சைத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து யாஷிகா, "இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிக்கும்போது எனக்கு 17 வயசு தான்.
வேதனை
அப்போ அடல்ட் காமெடி படத்தில் நடிச்சதால் நிறைய பேர் என்னை ஆபாசப்பட நடிகை மியா கலீஃபாவுடன் கம்பேர் பண்ணாங்க. ஆனால் தியேட்டர்ல போய் பார்க்கும்போது வித்தியாசமா இருந்துச்சு. அங்க ரசிகர்கள் கைத்தட்டி, டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க.
ஒரு ஆர்ட்டிஸ்ட்டா அதை நான் மதிக்கிறேன். வாழ்க்கையில பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கண்டிப்பா இருக்கும். நமக்கு பாசிட்டிவ் வரும்போது ஒரு 10 பேர் நெகட்டிவ் சொல்லத்தான் போறாங்க. வாழ்க்கையில யாருக்கும் ஹேட்டர்ஸ் இல்லாம இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.