விபத்திற்குப் பின் மீண்டும் வெளியே வந்த யாஷிகா ஆனந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

actressyashikaaannand
By Petchi Avudaiappan Nov 25, 2021 11:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 விபத்திற்கு பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் கடைத்திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆனந்த் 2017 ஆம் ஆண்டு வெளியான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா துருவங்கள் பதினாறு, கழுகு-2, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்ததோடு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். 

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் கடந்த ஜூலை மாதம் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று சென்னைக்கு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் யாஷிகாவின் பெண் தோழி ஒருவர் இறந்துவிட்டார்.

விபத்துக்கு பிறகு கிட்டதட்ட நான்கு மாதங்கள் சிகிச்சையில் இருந்த யாஷிகா தற்போது முழுமையாக குணமாகி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளா அவர் இனி திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாஷிகா தனது இன்ஸ்டகிராமில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அதில் ‘என்னைச் சுற்றியிருந்த நெருப்பை விட எனக்குள் இருந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததால் நான் உயிர் பிழைத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.