ராஜா ராணி சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகல் - ரசிகர்கள் சோகம்
பிரபல சீரியலான ராஜா ராணி -2 வில் இருந்து முக்கிய நடிகை விலகியுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
தமிழ் டிவி சேனல்களில் ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்க கூடிய ஒன்றாக சீரியல்கள் முக்கிய பங்காற்றுகிறது. இதில் விஜய் டிவியில் வெளியாகும் சீரியல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். டிஆர்பி ரேட்டிங்கில் அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பது போல் ரசிகர்களின் பேராதரவை பெற்று அடுத்தடுத்த பாகங்களாக ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவையே நடிகை ஆல்யா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ராஜா ராணி சீசன் 2-வில் சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஆல்யா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இதனால் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் சீரியலில் இருந்து அவர் சில வாரங்களுக்கு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.