ஆபரேஷன் செய்துக்கொண்ட நடிகை உயிரிழந்த விவகாரம் ... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
கர்நாடகாவில் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட பிரபல நடிகை உயிரிழந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சேத்தனா ராஜ் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 16 ஆம் தேதி காலை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அப்போது சேத்தனா திடீரென சுயநினைவை இழந்தார். சேத்தனா ராஜின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் அவரது நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியதாகவும், அவரை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சேத்தனாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை நிர்வாகம் அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என தெரிய வந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.