திருமணம் என்பது உடலுறவுக்காக மட்டும் இல்லை - தன்னை தானே திருமணம் செய்த நடிகை

India Vivek
By Thahir Aug 20, 2022 10:28 AM GMT
Report

பிரபல நடிகை கனிஷ்கா சோனி தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அறிமுகம் 

2007 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பாடல்களை பாடினார்.பின்னர் நடிகையாக வலம் வந்த அவர்,  தமிழில் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி என்ற படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் என்பது உடலுறவுக்காக மட்டும் இல்லை - தன்னை தானே திருமணம் செய்த நடிகை | Actress Who Married Herself Kanishka Soni

அண்மையில் குஜரைாத்தைச் சேர்ந்த க்ஷமா பிந்து என்ற 24 வயது பெண் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

தன்னைத் தானே திருமணம் 

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளாா்.

மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டேன். எனக்கு எந்த மனிதனும் தேவையில்லை.

திருமணம் என்பது உடலுறவுக்காக மட்டும் இல்லை - தன்னை தானே திருமணம் செய்த நடிகை | Actress Who Married Herself Kanishka Soni

நான் எப்போதும் தனியாகவும், தனிமையிலும் என் கிட்டாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

இவர் கழுத்தில் தாலியுடனும், நெற்றியில் செந்துாரம் பொட்டும் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருமணம் உடலுறவுக்காக மட்டும் அல்ல 

மேலும் அவர் தனது பதிவில் திருமணம் என்பதும் வெறும் உடலுறவு தொடர்புடையது மட்டுமல்ல, அதில் காதலும் நேர்மையும் இருக்க வேண்டும்.

இப்போதெல்லாம் அந்த மாதிரி யாரும் இருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை. நான் இந்த பதிவை குடித்துவிட்டும், போதை பொருள் சாப்பிட்டுவிட்டு பதிவிட்டுள்ளார் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.ஆனால் நான் நீண்ட காலம் திரைத்துறையில் இருக்கிறேன் இதுவரை நான் மது மற்றும் போதை பொருட்களை உட்கொண்டதில்லை என்று தெரிவித்தார்.

முழு மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.