ஹோட்டலில் உணவு சாப்பிட்ட போது சரிந்து விழுந்த நடிகை - சுய நினைவின்றி ஐசியூவில் அனுமதி..!
ஹாலிவுட் நடிகையான டோரி கெல்லி என்பவர் ஹோட்டலில் உணவு அருந்து கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரிந்து விழுந்த நடிகை
அமெரிக்காவின் பிரபல பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான டோரி கெல்லி என்பவர் அவரது நண்பர்களுடன் உணவகம் ஒன்றில் உணவு அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது டோரி திடீரென சரிந்து விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சுயநினைவின்றி ஐசியூவில் அனுமதி
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட டோரி , சுயநினைவை இழந்துள்ளதாகவும், முக்கிய உறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபெற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, டோரியின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan