அந்த 2 பேர்தான் அத பண்ணாங்க; பட்ட வேதனை.. பணம் குடுத்துட்டு போயிட்டாங்க - நடிகை வேதனை!

Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Dec 06, 2023 04:15 PM GMT
Report

நடிகை வினோதினி தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

நடிகை வினோதினி

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. பின்னர் 'சித்திரைப் பூக்கள்' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், மறுபடியும், என் ராஜாங்கம், தொண்டன், புதிரா புனிதமா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அந்த 2 பேர்தான் அத பண்ணாங்க; பட்ட வேதனை.. பணம் குடுத்துட்டு போயிட்டாங்க - நடிகை வேதனை! | Actress Vinothini About Her Husband Accident

தமிழ், மலையாளம், கன்னடா ஆகிய 3 மொழிகளில் நடிகை வினோதினி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் இப்போது கலக்கி வருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வினோதினி, தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது "எனது கணவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. சாலையோரமாக சரியான பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த எனது கணவர் மீது 20 வயது மதிப்புள்ள 2 நபர்கள் பைக்கில் மோதி விட்டு சென்று விட்டனர். விபத்தை ஏற்படுத்தியவர்கள் அடுத்த நாள் நீதிமன்றத்தில் 10,000 ரூபாய் அபராதமாக செலுத்தி விட்டு போய் விட்டார்கள்.

கண்ணீர் பேட்டி 

ஆனால் அந்த விபத்திற்கு பிறகு நாங்கள் பட்ட வேதனை சொல்ல முடியாதது. எனது குடும்பத்திலிருந்தும் சரி, கணவர் குடும்பத்திலிருந்தும் சரி யாருமே உதவி செய்யவில்லை. எனது கணவர் அந்த விபத்திலிருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்டார்.

அந்த 2 பேர்தான் அத பண்ணாங்க; பட்ட வேதனை.. பணம் குடுத்துட்டு போயிட்டாங்க - நடிகை வேதனை! | Actress Vinothini About Her Husband Accident

ஒரு வருடங்களுக்கு என்னால் அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை. நான் வேலையும் பார்க்க வேண்டும், குழந்தைகளையும் பார்க்க வேண்டும், எனது கணவரையும் பார்க்க வேண்டும், குடும்ப செலவுகளையும் பார்க்க வேண்டும். நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்தும், ஒரு சிலர் மட்டும்தான் வந்து பார்த்தார்கள். ஒருவேளை அனைவரும் சேர்ந்து வந்திருந்தால் விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்திருக்கலாம்.

ஆனால் அப்படி எதுவுமே செய்யவில்லை. அந்த நேரத்தில் எப்படியாவது என் கணவரை காப்பாற்றி என் குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்தது" என நடிகை வினோதினி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.