"சாக்கடையில் இருந்து வந்தவர் மீது சந்தன வாசமா வீசும்": ஆ.ராசாவை காட்டமாக விமர்சித்த நடிகை விந்தியா

dmk candidate aiadmk Vindhya
By Jon Apr 01, 2021 11:04 AM GMT
Report

ஆ.ராசாவின் வாயால் அவரது கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று விமர்சித்த நடிகை விந்தியா அவர்களின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்தோஷை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பேச்சாளரான நடிகை விந்தியா, மோசமானவர்களில் முக்கியமானவர் ராசா என்று கடுமையாக விமர்சித்தார்.

கடந்த முறை தேர்தலில் திமுக வெற்றி பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட காரணம் ஆ.ராசாவின் ஊழல் என்றும் இந்த முறை தோல்வி அடைவதற்கு அவரது வாய் தான் காரணமாக அமையும் என்று ஆரூடம் சொன்ன விந்தியா, சாக்கடையில் இருந்து வந்தவர் மீது சந்தன வாசமா வீசும் என்று விமர்சித்தார்.