2 நாள்களுக்கு முன்பு கூட சீமான் ஆள் அனுப்பினார் - போட்டுடைத்த விஜயலட்சுமி

Vijayalakshmi Seeman Tamil Nadu Police
By Karthikraja Feb 27, 2025 04:25 PM GMT
Report

சீமானை நேரில் சந்திக்க காத்திருக்கிறேன் என விஜயலட்சுமி பேசியுள்ளார்.

விஜயலட்சுமி

வழக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

விஜயலட்சுமி

புகாரின் அடிப்படையில், சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர், 2012 ஆம் ஆண்டு இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 

ஆஜராக முடியாது; என்ன செய்வீர்கள்? அசிங்கப்படுவது யாரு - சவால் விட்ட சீமான்!

ஆஜராக முடியாது; என்ன செய்வீர்கள்? அசிங்கப்படுவது யாரு - சவால் விட்ட சீமான்!

சீமானுக்கு சம்மன்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சீமான் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்ப பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

மேலும், வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியது. 

காவலாளி அமல்ரா

சீமான் ஆஜராகாத நிலையில், இன்று அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டு சுவற்றில் சம்மனை ஒட்டினர். சிறிதுநேரத்தில் அங்கிருந்த அவரது ஆதரவாளர் அந்த சம்மனை கிழித்தெறிந்தார். இதனால் சீமான் வீட்டில் இருந்த காவலாளிக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

திமுகவின் தூண்டுதல்

இதில் காவலாளி அமல்ராஜ் கைது செய்யப்பட்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், துப்பாக்கியை காட்டி மிரட்டுதல் என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஓசூரில் உள்ள சீமானிடம் கேட்ட போது, "திமுகவால் என்னை சமாளிக்க முடியாமல் அவர்களின் தூண்டுதலின் பேரில் புகார் அளித்துள்ளார்.

விசாரணைக்கு ஆரம்பம் முதலே ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். நாளைதான் ஆஜராக வேண்டும் என்றால் முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சீமான்

இந்நிலையில் என் பாவம் உன்னை சும்மா விடாது என நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், "சீமான் மீது வழக்கு தொடர திமுகவினர்தான் என்னை அழைத்து வந்ததாக இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறினார். முதலில் என்னை யாரென்று தெரியாது என கூறியவர், அடுத்து காங்கிரஸார்தான் என்னை அழைத்து வந்ததாகக் கூறினார். மீண்டும் அவர் மீது வழக்கு தொடர்ந்தபோது, என்னை பாஜகவினர்தான் இயக்குவதாகக் கூறினார்.

பாவம் சும்மா விடாது

அடுத்து 2023ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கு வந்தபோது என்னை பற்றி வெளியில் பேசாமல் இருக்குமாறு மாதம் ரூ.50,000 அனுப்பி வைத்தார். என்னை பொண்டாட்டி, பொண்டாட்டி என்று அவர் அழைத்த விடியோக்களையும் காவல்துறையின் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால்தான், விஜயலட்சுமி சீமானுடைய முதல் மனைவியா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்த மாதிரியான கேவலமான வேலைகளில் ஈடுபடுமாறு உங்களிடம் திமுக சொல்லவில்லை; பின்னர் ஏன் திமுகவை வம்பிழுக்கிறீர்கள்? என்னை நேருக்கு நேர் வருமாறு கூறியுள்ளீர்கள். என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேள்வி கேட்பதற்காக நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். 

2 நாள்களுக்கு முன்பாகக்கூட, என்னுடன் சமாதானப் பேச்சுக்கு ஆள்களை அனுப்பிவிட்டு, இன்னைக்கு அந்த பொம்பள அப்படி, இப்படி என பேசி துரோகம் செய்றீங்க. என்னுடைய பாவம் உங்களை சும்மா விடாது எப்படியெல்லாம் படுத்தப்போகிறது என்று பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.