நீங்க உத்தமரா சீமான் சாபம்லாம் விடுறீங்க - விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை
சீமானை கடுமையாக விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் கட்சி துவங்கியதிலிருந்து அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து விஜய் தனது கட்சி மாநாட்டில் கட்சி கொள்கைகளை அறிவித்த பின், விஜய்யின் கொள்கைகள் தவறு என கடுமையாக விமர்சித்தார்.
விஜயலட்சுமி
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும், சீமானை விமர்சித்தும் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் பேசிய அவர், "என்ன மிஸ்டர் சீமான் சாபம்லாம் விடுறீங்க, நேற்று விஜய் அண்ணனுக்கு ஒன்று ரோட்டோட இந்த பக்கம் இரு இல்லாட்டி அந்த பக்கம் இரு. சென்டரில் இருந்தால் லாரி நின்றால் லாரி அடித்து செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க? நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்?
சாபம் எல்லாம் விடுவதற்கு நான் உங்க ரூட்டுக்கே வரேன் அண்ணன் விஜய் ஆகட்டும் இல்ல திமுக ஆகட்டும் கொள்கை ரீதியான தவறு பண்ணியிருக்காங்க. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க.
ஆபாச வீடியோ
சோ கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல. விட்டீங்களே. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்?
முதல்ல உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம். அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க.
உத்தமர் மாதிரி சாபம்
திமுகவுக்கு என்ன செய்யனும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாம காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.
அதனால பெரிய உத்தமர் மாதிரியோ கண்ணகி மாதிரியோ சாபம் எல்லாம் விடாதீர்கள். 24 மணி நேரமும் பெங்களூரில் இருந்து நான்தான் உங்களுக்கு சாபம் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அதனால கொள்கை ரீதியாக தவறு பண்ணவங்களே லாரி அடிச்சா சவாங்கனா நீங்க தமிழ்நாடு மக்கள் செருப்பால் அடித்தே ஒருநாள் சாவிங்க" என பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். வழக்கு விசாரணை தொடர்பாக விளக்கமளிக்க சீமான் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான நிலையில், திடீரென வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி பெங்களூருக்கு சென்றுவிட்டார்.