நிறை மாத நிலவே வா வா..நடிகை வித்யா பிரதீப்பின் பேபி பம்ப் புகைப்படங்கள் - வேறலெவல்!
பிரபல சின்னதிரை நடிகை வித்யா பிரதீப்பின் பேபி பம்ப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வித்யா
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை வித்யா பிரதீப். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் செய்தார். இதனால் நிறைய விளம்பரங்களில் வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பிரபலமான வித்யா பிரதீப் 2010-ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான, 'அவள் பெயர் தமிழரசி' என்னும் படத்தில் டான்சராக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தடம் வித்யா பிரதீப் அதிபர், பசங்க 2, யென்னி துணிக,ஸ்டிரைக்கர்,செல்ஃபி, கண்ணகி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னட உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பிரதீப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன்பிறகு பயோடெக்னாலஜியில் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பை வித்யா பிரதீப் முடித்தார் .
பேபி பம்ப்
அதன்பிறகு , சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் ஸ்டெம் செல் பயாலஜியில் பிஎச்டி முடித்தார் .தற்போது அமெரிக்காவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார் . இந்த நிலையில் புகைப்பட கலைஞர் பிரதீப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.
திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வித்யா பிரதீப் தற்போது தாயாக உள்ளார். கணவருடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட பேபி பம்ப் புகைப்படங்களை வித்யா பிரதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil