திருமணமானவுடன் விவாகரத்து குறித்து கேட்ட ரசிகர்கள் - கடுப்பான பிரபல நடிகை
தமிழில் 2012ம் ஆண்டு வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா ராமன்.
அப்படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, வீரம், ரன் ராஜா ரன் என நிறைய படங்கள் நடித்தார், அதேசமயம் தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார்.
இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சஞ்சய் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். அண்மையில் படு விமர்சையாக திருமணமும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்தது.
மாலத்தீவுக்கு வித்யூ லேகா சென்று அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் உடை அணிந்தால் உடனே விவாகரத்து தான், எப்போது உங்களது விவாகரத்து என கேட்டுள்ளனர்.
அந்த கமெண்ட்டுகளை பார்த்த வித்யூலேகா அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.