வனிதாவின் யூடியூப் சேனல் வருமானம், எவ்வளவு தெரியுமா? - கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Vinothini
in பிரபலங்கள்Report this article
நடிகை வனிதா நடத்தி வரும் யூடியூப் சேனல் மூலம் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வனிதா
தமிழ் சினிமாவில் பிரபலங்களான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள், வனிதா. இவர் 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.
பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
யூடியூப் சம்பளம்
இந்நிலையில், இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனல் மூலம் இவரது சம்பாத்தியம் குறித்த கேள்வி இருந்திருக்கும். தற்பொழுது அவர் மாதம் சம்பாதிக்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நடிகை வனிதா கூறுகையில், "தொடர்ந்து வீடியோ வெளியிட்டு கொண்டே இருந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை சம்பாதிக்கலாம். சரியாக வீடியோக்களை பதிவிடாமல் இருந்தால் 5 ஆயிரம், ரூ 10 ஆயிரம் என மாத வருமானம் வரும்" என்று கூறியுள்ளார்.

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan
