மீண்டும் காதலிக்க தயார், ஆனால் இப்போது நான் சிங்கிள் - வனிதா விஜயக்குமார்!

நடிகை வனிதா விஜயகுமார் தற்போதைக்கு தான் யாரையும் காதலிக்கவில்லை என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இது கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாக மாறியது.

ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதையடுத்து மிகவும் விரக்தியடைந்த வனிதா சில நாட்களுக்கு மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கியிருந்தார்.

பின்னர் சமையல், லைஃப்ஸ்டைல் என தனது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்து வந்தார். படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்திலும் வனிதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது ஒருவரைக் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு வனிதா விஜயக்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக … நான் இப்போது சிங்கிள் என்றும் அதே நேரத்தில் காதலிக்க தயாராகவும் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எந்த வதந்திகளையும் பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தான் யாரையும் தற்போது காதலிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்