நடிகை சமந்தாவுக்கு வனிதா கொடுத்த மாஸ் அட்வைஸ் - என்ன தெரியுமா?
இந்த சமூகத்தில் தான் ஒழுக்கம் இல்லை என கூறிய சமந்தாவின் கருத்துக்கு நடிகை வனிதா விஜயகுமார் தனது கருத்தை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், வதந்திகளும் கிளம்பின.
இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒரு பெண் முடிவு எடுக்கும்போது இந்த சமூகம் அவளது ஒழுக்கம் குறித்த கேள்விகளைக் கேட்கிறது.
ஆனால் அதே முடிவை ஆண் எடுக்கும்போது அவ்வாறு கேள்வி எழுப்புவதில்லை. இதன்படி பார்த்தால் இந்த சமூகம்தான் ஒழுக்கம் இல்லாமல் இருப்பது போல தோன்றுகிறது என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நடிகை வனிதா விஜயகுமார் அவருக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார்.
இங்கே சமூகம் என்று எதுவுமே இல்லை பேபி, உனது வாழ்க்கையை நன்றாக வாழ கற்றுக் கொள் என்று அட்வைஸ் செய்ததோடு, மக்கள் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள்.
அவர்களைப்பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
நீ உன்னுடைய வாழ்க்கையை நோக்கி முன்னேறிக் கொண்டு போய்க் கொண்டே இரு, உனக்கு வலிமை இன்னும் கூடும் என்று பதிவு செய்துள்ளார்.
சமந்தா மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரின் இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.