ஓவியா அதை செய்தால் மட்டும்..? பணக்காரி பணக்காரி போலதான் நடப்பாள் - வனிதா விஜயகுமார்!
நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.
நடிகை வனிதா
பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் சீசன் 7னில் இடம்பெற்றுள்ளார். அதில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என அவர் பேசியது பெரும் விவாதப்பொருளானது.
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார், தனக்கு வரும் நெகட்டிவான கமெண்டுகளுக்கு ஜோவிகாவுடன் இணைந்து முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதாவது "நான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை சிலர் கோழைத்தனமான முடிவு என்று பேசினார்கள். எனக்கு ஒரு விஷயம் பிடிக்க வில்லை என்றால், ஒத்து வராது என்றால், அந்த விஷயத்துக்கு என்னால் நோ சொல்ல முடியும்.
பேட்டி
என்னுடன் இணைந்து யாராவது போட்டோ எடுத்து போட்டாலே, அது செய்தியாகி விடுகிறது. அதை நான் உருவாக்கவில்லை. மீடியாதான் என்னை பற்றி எழுதுகிறார்கள். பிக்பாஸில் ஓவியா மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
ஓவியா அவரின் பாய் ஃபிரண்டுடன் ஒரு போட்டோவை பதிவிட்டால் யாருமே அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. நான், என்னுடைய நண்பருடன் அல்லது என்னுடன் நடிக்கும் சக நடிகருடன் ஒரு போட்டோவை போட்டால், இவரைத்தான் வனிதா கல்யாணம் செய்து கொள்ளப்போகிறாரா என்று போட்டு விடுகிறார்கள். சிலர் நான் பெரிய பணக்காரிபோல நடப்பதாக சொல்கிறார்கள். பணக்காரி பணக்காரி போலதான் நடப்பாள்" என்று வனிதா பேசினார்.