என் கூட கடைசி வர இரு என வனிதாவிடம் கதறும் பவர் ஸ்டார் - அவரே வெளியிட்டுள்ள வீடியோ

தமிழில் சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதாவிடம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசிய வீடியோவை வனிதா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியினரின் மகள்தான் நடிகை வனிதா. இவருக்கும் சர்ச்சைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த அளவுக்கு சர்ச்சைக்கு பெயர் போன நாயகியாக வனிதா விஜயகுமார் வலம் வருகிறார்.

சமீபத்தில் தான் தனது மூன்றாவது கணவர் பீட்டர் பால் என்பவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து தனது பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் இவரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்த அப்டேட் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், அவருடன் இணைந்து இரட்டை அர்த்த வசனத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதற்கு நெட்டிசன்கள் தங்களது கிண்டல் கமெண்டுகளை வாரி தட்டி வருகின்றனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்