காமிக்கிறப்போ பாருங்க; 60 வயசான அம்மா.. ஆம்பளைங்க விடமாட்டாங்க - வாணி போஜன் பளீச்!
நடிகை வாணி போஜன் நெகட்டிவ் கமெண்டுகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.
வாணி போஜன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆஹா" சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமும் அடைந்தார். சத்யா கேரக்டரில் ஏறக்குறைய 5 ஆண்டுகள் அவர் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார்.
மேலும் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம்' சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் 'ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை' தொடர்ந்து 'செங்களம்' வெப்சீரிஸில் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அ
ண்மையில் வாணி யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவரின் புகைப்படங்களுக்கு வந்த கமெண்டுகளை படித்து, அதற்கான பதிலை தொகுப்பாளர் கேட்டார்.
அப்போது வாணியிடம் "அதான் காமிக்கிறதுனு முடிவு பண்ணீட்டிங்கல்ல, அத கொஞ்சம் நால்லா காமிக்க வேண்டியது தானே, கை எடுக்க வேண்டியது தானே" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்கு பதிலளித்த வாணி போஜன் "இது ஒரு அசிங்கமான விஷயம்னு நினைக்கிறேன். காமிக்கிறப்போ பாத்துட்டு போங்க, காமிக்காதப்போ ஏன் நீங்களா கட்டாயப்படுத்துறீங்க. இதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறதா பார்த்தா வருத்தமா இருக்கு.
ஏனா எல்லா குடும்பத்திலும் ஒரு அம்மா இருப்பாங்க, ஒரு தங்கச்சி இருப்பாங்க, அவங்ககிட்ட போயி கேட்க மாட்டாங்கல்ல. நாங்க ஒரு நடிகையை இருப்பதினால் இப்படியெல்லாம் மெசேஜ் வருகிறது. இது தவறா இருக்கு. சாத்தியமா இவங்கல்லாம் திருந்த மாட்டாங்க. ஒரு 50,60 வயசான அம்மா அவங்க பயன் கூட பைக்கில் பின்னாடி உக்காந்துட்டு போவாங்க. சிக்னெலில் பைக் நிக்கிறப்போ, அவங்களுடைய சேலை அங்கங்க விலகியிருக்கும்.
அவங்களுக்கு தெரியாதுல, வயசானவங்க தானே. அப்போ அந்த சிக்னலில் இருக்கும் அத்தனை ஆம்பளைங்களுடைய கண்ணும் அந்த வயசான அம்மா மேல இருக்கும். இதை நான் பார்த்திருக்கேன்.
இது தவறா, சரியா என்று தெரியாது, நான் பார்த்த வரைக்கும் அந்த மாதிரி நிறைய பேர் பார்த்துருக்காங்க. எப்படி வயசானாலும் விடமாட்டாங்க " என்று வாணி போஜன் பேசியுள்ளார்.