கண்ணீர் மல்க பிரமாண்டமாக நடந்த பிரபல சீரியல் நடிகையின் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி திலகா. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் மக்களிடம் நல்ல புகழுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜா ராணி 2, கோகுலத்தில் சீதை, மகராசி, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வைஷாலி திலகா.
அவர் முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும் இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘கதகளி’படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களில் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அதன் மூலம் இல்லாமல் சீரியல்களில் நடித்ததே நல்ல வாய்ப்பாக அமைந்தது. மேலும் சீரியல்களில் நடித்தது மூலமாக அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இவர் சத்யா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
இருவருக்கும் நிச்சயம் முடிந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தனது பிறந்தநாள் அன்று இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் திருமண ஷாப்பிங் செய்யும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கு திருமணம் ஆன நிலையில் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு தாலி கட்டும் போது எமோஷனல் ஆகிவிட்டார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.