திருமணத்தில் கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னாள் நடிகை - வைரல் வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முன்னாள் நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் முன்பு ஐஸ்வர்யாவாக நடித்தவரும், தற்போது நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் மலர் என்ற கேரக்டரில் நடிப்பவருமான வைஷாலி தனிகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'கதகளி' படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர காதல் கசகுதய்யா, திரி, எங்க அம்மா ராணி, கடுகு, ராஜா மந்திரி, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களிலும் வைஷாலி நடித்துள்ளார். இந்நிலையில் தனது நீண்டநாள் காதலரான சத்யதேவ் என்பவரை சமீபத்தில் வைஷாலி தனிகா திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் முன்னிலையில் சத்யதேவ் - வைஷாலி தனிகா திருமணம் கோலாகலமாக நடந்தேறிய நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நிகழ்வுகள் தொடர்பான ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.
குறிப்பாக காதலர் தேவ் தன் கழுத்தில் தாலி கட்டி கணவனாக மாறிய அந்த தருணத்தில் எமோஷ்னலாகி கண் கலங்கும் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைஷாலி வைத்துள்ளார்.