பிரபல நடிகைகள் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - மீண்டும் கைது?
நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதால் போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடிகைகள் சிலருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது. விஸ்ரூபம் எடுத்த இந்த விஷயத்தில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், பார்ட்டி ஒன்றில் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் தொடர்புடைய நடிகைகள் யார் என்று போலீசார் விசாரித்தனர்.
அதன் அடிப்படையில் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், 4 மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர்.
ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தினார்களாக என உறுதி செய்யும் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனால் நடிகைகளின் தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை உடனடியாக தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.