என் பொண்ண சினிமாக்கு கொண்டு வராதது இதனாலதான் - ஓப்பனாக சொன்ன ஊர்வசி!
தனது மகளை ஏன் சினிமா துறையில் அறிமுகம் செய்யவில்லை என்பது குறித்து நடிகை ஊர்வசி பேசியுள்ளார்.
நடிகை ஊர்வசி
இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. ஒரு காலகட்டத்தில் மலையாளம், தமிழ் மொழிகளில் டாப் கதாநாயகியாக வளம் வந்தார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ஊர்வசி, தனது நகைச்சுவை பேச்சு மற்றும் நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர், தனது மகளை ஏன் சினிமா துறையில் அறிமுகம் செய்யவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் கூறியதாவது "ஆர்டிஸ்ட்டோட பசங்கனு சொல்லும்போது பொதுவாகவே ரசிகர்கள் கிட்ட அந்த ஒப்பீடு இருக்கும். அவங்க அத அப்படி பண்ணிட்டாங்க. ஆனால் இவங்க கொஞ்சம் இப்படி பண்ணிருக்காங்கனு சொல்லுவாங்க. ஒரு புது முகத்துக்கும், இப்படி ஒரு ஆர்டிஸ்ட்டோட குடும்பத்துல இருந்து வரவங்களுக்கும் இருக்குற ரிஸ்க் அதுதான்.
அதனால்தான் நான் அவளிடம், "எதுமே வேணாம்.. நீ படிச்சிட்டு வேலைக்கு போ" என்று சொன்னேன். அதனால் பொறுமையா படிச்சிட்டு ஒரு நல்ல மல்டி நேஷனல் கம்பனியில வேலைக்கு போய்ட்டா" என்று தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
