பிரபல நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி தற்கொலை - அழுகிய நிலையில் உடலை மீட்ட போலீசார்
பிரபல நடிகை ஊர்வசியின் தம்பி மற்றும் அவரது மனைவி இருவரும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஊர்வசியின் தம்பி கமல். இவருடைய மனைவி விழுப்புரத்தைச் சேர்ந்த பிரமிளா (52). கமலுக்கும், பிரமிளாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரமிளா அண்ணன் சுசீந்திரன் வீட்டில் கடந்த 2 வருடங்களாக தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால், சுசீந்திரனுக்கு சரியான வேலை இல்லை. இதனால், வீட்டில் வறுமையில் இருவரும் வாடியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு தனித்தனி அறைகளில் சுசீந்திரனும், பிரமிளாவும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.
இவர்களது இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்தது. இதனையடுத்து, அவர்களது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், வீட்டை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் சுசீந்திரன், பிரமிளா ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், வறுமை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களின் தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது. வீட்டுக்கு வாடகை செலுத்த முடியவில்லை.வீட்டிலுள்ள பொருட்களை விற்று பணத்தை வீட்டின் உரிமையாளருக்கு வழங்கிவிடுங்கள். எங்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுங்கள் என்று எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வறுமையில் வாடியாக பிரமிளாவுக்கு நடிகை ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பணா பணம் உதவி செய்து வந்துள்ளார். ஆனால், அவர் இறந்த பிறகு வேறு யாரும் பிரமிளாவிற்கு உதவ முன் வரவில்லை. வறுமை காரணமாக பிரமிளாவும், அண்ணன் சுசீந்திரனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.