கிளாமர் சீன் பண்ணும் போது...கமலோட அந்த சம்பவம் - அதனாலேயே ஒதுங்கினேன்! ஊர்வசி

Kamal Haasan Urvashi
By Karthick Jun 10, 2024 10:19 AM GMT
Report

ஊர்வசி

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் மாபெரும் இடத்தை பெரும் வரிசையில் நிச்சயமாக ஊர்வசிக்கு தனி இடம் உண்டு.

மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் எண்ணற்ற படங்களில் நாயகியாக நடித்து வந்த ஊர்வசி, தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

tamil actress urvashi

காமெடி, எமோஷனல் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நடிகை ஊர்வசி நடிப்பில் அண்மையில் வெளியான "ஜே பேபி" படம் அவருக்கு பெரிய பாராட்டுக்களை பெற்று கொடுத்தது.

tamil actress urvashi

அண்மையில் தனது சினிமா அனுபவங்களை குறித்து அவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், தான் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரவில்லை என்று கூறி தமிழில் இருந்து தான் மலையாள சினிமாவிற்கு சென்றதாக சுட்டிக்காட்டினார்.

கமல் அட்வைஸ்

தமிழில் ஊர்வசி என்று பெயர் வைத்து அதன் பிறகே தான் மலையாள சினிமாவிற்கு சென்றதாக கூறி, அப்போது என் உடம்பை பார்த்து பாலிவுட் நடிகைகள் போல் இருந்ததால் தமிழ், இந்தியில் தான் முதலில் வாய்ப்பு கேட்டார்கள் எனக் கூறினார்.

tamil actress urvashi

ஆனால் தனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்றும் கிளாமர் ரோல் வேண்டாம் என்று இருந்ததாக தெரிவித்த ஊர்வசி, அதன் காரணமாகவே தெலுங்கு சினிமாவை ஒதுக்கி வந்ததாக கூறினார்.

tamil actress urvashi and kamal

மேலும், கமல் சார் தன்னிடம், ஊர்வசி நீங்க நல்ல கேரக்டர் பண்ண ஆசைப்படுகிறீங்க...லவ் சீன், கிளாமர் சீன் பண்ண கூச்சமாக இருக்கிறது, கொஞ்சம் மலையாளத்தில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி நல்ல வாய்ப்பு வந்தால் விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்தார் என்று தெரிவித்த ஊர்வசி, தனக்கு வாழ்க்கை கொடுத்ததே தமிழ் சினிமா தான் என்றும் பேசினார்.