அரைகுறை ஆடையுடன் ஏர்போர்ட் வந்த பிக்பாஸ் நடிகை - திட்டித் தீர்த்த ரசிகர்கள்
அரைகுறை ஆடையுடன் ஏர்போர்ட் வந்த நடிகை ஊர்பிக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில ஹிந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஊர்பி ஜாவேத் பிக்பாஸ் OTT-யில் கலந்து கொண்டு சில நாட்களில் வீட்டிலிருந்து வெளியேறினார். துணிச்சலுக்குப் புகழ்பெற்ற அவர் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டவர்.
இதற்காக பல நேரங்களில் அவரை ரசிகர்கள் திட்டித் தீர்ப்பதை வழக்கம். இந்நிலையில் நடிகை ஊர்பி ஜாவேத் விமான நிலையத்தில் டெனிம் ஜாக்கெட் மற்றும் உள்ளாடை அணிந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் ஜாக்கெட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
வழக்கம்போல ரசிகர்கள் பலர் அவரது ஆடை குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.