பதறிப்போன நடிகை த்ரிஷா - வாக்களிக்க வந்த இடத்தில் நடந்த சம்பவம்!
நடிகை த்ரிஷாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களவை தேர்தல்
தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த், விஜய், அஜித் முதல் அனைத்து நடிகர், நடிகைகளும் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் நடிகை த்ரிஷாவும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகை த்ரிஷா
அவர் வாக்களித்துவிட்டு தேர்தல் மை இட்ட கையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் மற்றோரு புகைப்படமும் இணையத்தில் வெளியானது.
அதில் அவர் பதற்றமடைவதை போன்று உள்ளது. அவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற பெண் காவலர் தடுமாறி கீழே விழ திரிஷா அதை பார்த்து ஷாக் ஆகி பதறியுள்ளார். அப்போது எடுத்த போட்டோ தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொப்பை முதல் மலச்சிக்கல் வரை தீர்வு கொடுக்கும் கடுக்காய் பொடி... எப்படி சாப்பிடனும்னு தெரியுமா? Manithan

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
