கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகை திரிஷா ; ட்விட்டரில் அவரே பதிவிட்டிருந்த செய்தி

trisha negative tamil actress recovered covid positive
By Swetha Subash Jan 12, 2022 05:40 AM GMT
Report

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை திரிஷா, தற்போது தொற்றில் இருந்து மீண்டுவிட்டார்.

நாட்டையே உலுக்கிவருகிறது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பரவல்.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதை அடுத்து, மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

வடிவேலு, அருண் விஜய், சத்யராஜ், மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் என பலருக்கு கொரோனா பரவியுள்ளது.

கடந்த வாரம் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை திரிஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்துகொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன். தற்போது நன்றாக உணர்கிறேன். தடுப்பூசிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

தற்போது தொற்றில் இருந்து குணமாகிவிட்டதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“நெகட்டிவ் என்ற வார்த்தையைப் படிக்க ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. தற்போது 2022இல் உங்களுக்காக தயாராக இருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.