மியா கலிபா லுக்கில் உருவெடுத்த நடிகை திரிஷா - ரசிகர்கள் குஷி!

கவர்ச்சி நடிகர் மியா கலிபா தோற்றத்தில் காட்சியளித்த நடிகர் திரிஷாவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை திரிஷா. ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.

இந்த நிலையில், இவர் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், பெரிய மூக்கு கண்ணாடி ஒன்றை மாட்டிக்கொண்டு சோஃபாவில் படுத்தபடி ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிடம் மியாகலிபாவே சோபாவில் அமர்ந்திருப்பது போல் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்