அருவருக்கத்தக்க கருத்து: நடிகை த்ரிஷா கடும் கண்டனம்

Trisha Nainar Nagendran
By Pavi Feb 16, 2026 11:25 AM GMT
Report

மாநில அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் இருந்து இப்படியான அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை என நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கண்டனம் தெரிவித்த த்ரிஷா

கடந்த 13ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடன் தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளித்துப் பேசிய அவர், விஜயை நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

அருவருக்கத்தக்க கருத்து: நடிகை த்ரிஷா கடும் கண்டனம் | Actress Trisha Issues Statement Against Nainar

இவரது கருத்துக்கு பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அருவருக்கத்தக்க கருத்து: நடிகை த்ரிஷா கடும் கண்டனம் | Actress Trisha Issues Statement Against Nainar

அதில், ’மாநில அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் இருந்து இப்படியான அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை எனவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்க வேண்டாம்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எந்த அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில்லை எனவும் அரசியல் நிலைப்பாட்டில் நடுநிலையுடன் இருக்கவே விரும்புகிறேன்.

எனது நடிப்புத் திறமையால் அடையாளம் காணப்பட விரும்புகிறேன். அரசியல் அடையாளம் எனக்கு தேவையில்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.