சிம்புவுடன் நடிகை த்ரிஷாவுக்கு காதல்? திருமணத்திற்கு மறுப்பது இதனால் தான்...!
நடிகை த்ரிஷா பிரபல நடிகரான சிம்புவை காதலித்து வந்ததாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்யாத த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரும் வருபவர் தான் த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.
40 வயதை நெருங்கிய நிலையிலும் நடிகை த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவதற்கு காரணம் இது தான் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
சிம்புவுடன் காதல்
இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.
தற்போது 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். துணை நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நிலையில் முன்னணி நடிகையாக உயர தொடங்கினார்.
நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்கள் வைர மோதிரங்களை மாற்றி கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார் த்ரிஷா.
இருவரும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர். சில ஆண்டுகளுக்கு லிவிங் ரூகெதரில் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. இருவரும் பின்னர் பிரிந்துவிட்டனர்.
பின்னர் த்ரிஷா நடிகர் சிம்புவின் காதல் வலையில் சிக்கி மீண்டு வந்தார். தற்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.ஆனால் யாரையும் பிடிக்கவில்லை என திருமணம் செய்யாமல் உள்ளார்.
நயன்தாரா போல் நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது.ஆனால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் போதெல்லாம் விவாகரத்து செய்தவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள் என்று த்ரிஷா கூறுவதாக தெரிவித்தார்.
மேலும் அடுத்தடுத்து திருமண முறிவு என தோல்விகளை சந்தித்த த்ரிஷா கல்யாணம் செய்தால் அதுவும் தோல்வியில் முடிந்துவிடுமோ என்று பயப்படுவதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.