தெலுங்கு பிரபல நடிகருடன் கரம் கோர்க்கும் த்ரிஷா - யார் தெரியுமா?
தெலுங்கில் 2 படங்களுக்கு பிரபல நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் திரையுலகில் நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக லியோ, அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி என கலக்கி வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக்லைஃப் படத்திலும் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டோலிவுட் விஜயம்
தொடர்ந்து, பாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது 68 வயதாகும் பிரபல நடிகரான சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஷ்வம்பரா என்ற படத்தில் நடிக்க த்ரிஷா கமிட் ஆகி இருக்கிறாராம்.

பிரபல இயக்குனரான மல்லிதி வசிஷ்டா தான் இயக்கவுள்ளாராம்.
அதன்பின், நாகார்ஜூனாவின் 100வது படமான லவ் ஆக்ஷன் ரொமான்ஸ் என்ற படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan