பலமுறை அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட கேமராமேன், மறுத்ததால் டார்ச்சர் - வெளிப்படையாக பேசிய நடிகை!

Vinothini
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமா நடிகை தனது படங்களில் நடந்த கசப்பான அனுபவத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகை தாரணி. இவர் ஹீரோயினாகவும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் காலத்தில் இவருக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
இந்நிலையில், அவர் பேசுகையில், "எனது முதல் இரண்டு படங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த போது இயக்குனர் மற்றும் கேமரா மேன் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க. ஆனால் கேமரா மேன் தான் அதிகமுறை வெளிப்படையாக கேட்டார்.
தங்கச்சி நடிகையா இருந்த உன்ன ஹீரோயின் ஆக்கி இருக்கோம். தயவு செய்து தப்பா எடுத்துக்காதிங்க, நான் அப்படி தான் சினிமால வந்தேனா என்று கேட்டுக்கிட்டு வாங்க. தப்பா இருந்தா என்ன சொல்றீங்களோ அதை செய்றேன்னு சொன்னேன். அவர் இந்த பதிலை எதிர்ப்பார்க்காமல் கேமரா மேன் விட்டுட்டார். அப்போது அதிக சூடு இருக்கும் லைட்டை என் மீது காட்டி கஷ்டப்படுத்தினார்" என்று கூறியுள்ளார்.