இயக்குநரும், கேமராமேனும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டனர்; அப்படி டார்ச்சர் செய்தனர் - நடிகை தாரணி!

Ajith Kumar Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath Aug 06, 2023 04:05 AM GMT
Report

நடிகை தாரணி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

நடிகை தாரணி

நடிகை தாரணி தனது 15 வயதில் திரையுலகில் அறிமுகமானார். 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படமான 'உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தில் கமலின் தங்கையாக நடித்தார்.

இயக்குநரும், கேமராமேனும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டனர்; அப்படி டார்ச்சர் செய்தனர் - நடிகை தாரணி! | Actress Tharani Opens About Adjustment

தொடர்ந்து பாலைவன பறவைகள், சின்ன வாத்தியார், கிழக்கு வீதி, வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். கிட்டதட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் சிறப்பு தோற்றத்தில் நடித்தவர். செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர். மிடில் கிளாஸ் மாதவன் என்ற படத்தில் வடிவேலுவுடன் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது பல சீரியல்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு இவர் பேட்டியளித்திருந்தார். அதில் இவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

பேட்டி

அதற்குப் பதிலளித்த தாரணி 'ஒரு பெண்ணாக இருந்தால் திரைத் துறையில் அதை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. முதல் இரண்டு மூன்று படங்களில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. நான் கதாநாயகியாக ஒரு படம் பண்ணேன். அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இரண்டு பேருமே என்னிடம் அடஜஸ்ட்மென்ட் கேட்டார்கள்.

இயக்குநரும், கேமராமேனும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டனர்; அப்படி டார்ச்சர் செய்தனர் - நடிகை தாரணி! | Actress Tharani Opens About Adjustment

இயக்குநர் கூட பரவா இல்லை ஒளிப்பதிவாளர் என்னை ரொம்ப தொந்தரவு பண்ணினார். அந்த ஒளிப்பதிவாளர் என்னிடம் ' தங்கச்சி ரோலில் இருந்த உங்களை ஹீரோயினாக ஆக்கியிருக்கோம்" என்று கூறினார். நான் சொன்னேன் 'சார் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் என்னைப்பற்றி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். நான் இந்த சினிமா துறையில் இப்படித்தான் வந்தேனா என்று கேளுங்கள். யாரவது என்னை தப்பாக சொன்னார்கள் என்றால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்று சொன்னேன்.

அப்போது இந்த மாதிரி ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரும் அதை விட்டுவிட்டார். இதனைத் தொடர்ந்து கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த ஒளிப்பதிவாளர் அதிகபட்சமான சூடு கொண்ட ஒரு லைட்டை எனது முகத்தில் பட்டார் என்று திருப்பினார். என் மூஞ்சியே எரிந்து அம்மா என்று கத்தி நான் அங்கேயே உட்காந்துவிட்டேன். இந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.