ரஜினிகாந்த் இப்படி பண்ணுவாருனு நான் எதிர்பார்க்கவே இல்லை - தமன்னா ஓபன் டாக்!
நடிகை தமன்னா ரஜினிகாந்த் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமன்னா
திரையுலகில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் வியாபாரி படத்தில் நடித்தார் ஆனால் இவர் பெரிதளவில் பேசப்படவில்லை. அதன்பின்னர் இவர் கல்லூரி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது. மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் இவர் கவர்ச்சியாக ஆடிய நடனம் டிரெண்டானது.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். அதில், "தான் பார்த்ததிலேயே மிகவும் எளிமையானவர் என்றால் அது ரஜினிகாந்த்தான். இந்த அளவிற்கு உயரத்தில் இருந்தும் தன்னுடைய எளிமையை மிகச்சிறப்பாக ரஜினிகாந்த் மெயின்டெயின் செய்து வருகிறார்.

 இது இரண்டும் ஒரே நபரிடம் இருப்பதை தான் பார்த்ததில்லை. ரஜினி இப்படி இருப்பார் என்று தான் முன்னதாக எதிர்பார்க்கவேயில்லை" என்று கூறியுள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    