விஜய்யுடன் அந்த படத்தில் நடிச்சது தான் நான் செஞ்ச பெரிய தப்பு - ஓப்பனாக பேசிய தமன்னா!
நடிகை தமன்னா நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நடிகை
திரையுலகில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் வியாபாரி படத்தில் நடித்தார் ஆனால் இவர் பெரிதளவில் பேசப்படவில்லை. அதன்பின்னர் இவர் கல்லூரி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது. மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் இவர் கவர்ச்சியாக ஆடிய நடனம் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
தமன்னா பேட்டி
இந்நிலையில், இவர் நடிகர் விஜய்யுடன் நடித்த சுறா படம் பேசியுள்ளார். அதில் அவர், "சுறா படத்தில் நடித்ததுதான் நான் செய்த பெரிய தவறு. அந்தப் படம் கண்டிப்பா ஃப்ளாப் ஆகும் என்று எனது உள் உணர்வு அப்போதே சொன்னது. ஆனால் வேறு வழியில்லாமல் நடித்துக்கொடுத்தேன்.
ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் அதை முடித்துக்கொடுக்க வேண்டியது நடிகர்களின் கடமை என்பதை நான் அறிவேன். ஒரு படத்தில் சில விஷயங்கள் சரியாக இல்லை என்றால் நான் தைரியமாக இப்போது சொல்வேன். ஆனால் சுறா சமயத்தில் எதையும் சொல்லமுடியவில்லை. அதனால் நடித்துக்கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். பல படங்களை பார்க்கிறோம்; பல படங்களில் நடிக்கிறோம்; அதனால் சில விஷயங்களை பார்த்தாலே தெரியும்.
இந்தப் படம் சரியாக வராது என்று. நடிகர்களுக்குமே அந்த உள் உணர்வு இருக்கும். இனிமேல் அதுபோன்ற படங்களில் நடித்து உங்களை எல்லாம் டார்ச்சர் செய்யமாட்டேன்" என்று கூறியுள்ளார். இவர் அளித்த இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.