இப்படி பண்ணாதீங்க..அப்புறம் அப்படி எழுதுவீங்க - கொந்தளித்த டாப்சி!
டாப்சி புகைப்படக் கலைஞர்களிடம் கோபப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாப்சி
நடிகை டாப்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வர இருந்தார். அவரை படம் எடுப்பதற்காக புகைப்படக்காரர்கள் காத்திருந்தனர். டாப்சியின் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கும்போது புகைப்படக்காரர்கள் படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்த வீடியோவில் நடிகை டாப்சி தனது காருக்குள் நுழைய முற்படுகையில் அவருக்கு இடையூறாக நின்ற புகைப்படக்காரர்களிடம் இப்படி செய்யாதீர்கள் என தொடர்ந்து வலியுறுத்துகிறார். மேலும், ”என்னை இப்படி தாக்கி விட்டு, பின் அவர் அப்படி கத்தினார் என்று எழுதுவீர்கள்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
வைரல் வீடியோ
இடையே தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த புகைப்படக்காரர்களிடம் தனது வாழ்த்தையும் பகிரும் டாப்சிக்கு இடையூறாக புகைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து நிற்கும் நிலையில், ’இப்படி செய்யாதீர்கள்’ என கண்டிப்பான குரலில் தெரிவித்து விட்டு பின் காரில் ஏறிச்சென்று விடுகிறார்.

இந்த வீடியோவிற்கு எதிர்வினையாற்றி உள்ள நெட்டிசன்கள், நடிகை டாப்ஸியை ஜெயா பச்சனுடன் ஒப்பிட்டு, இரண்டாவது ஜெயா பச்சன் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், டாப்சி தனது கோபத்தை கட்டுப்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil